மினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் புதிய ஐபேட் மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஏர்பாட்ஸ் 3 மாடலும் அறிமுகமாகும் என தெரிகிறது. இரு சாதனங்களும் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

லிக்விட் க்ரிஸ்டல் சாப்ட் போர்டு (எல்சிபி) தொழில்நுட்பத்திற்காக ஆப்பிள் நிறுவனம் சீன உற்பத்தியாளரான ஜியலின்யி-யை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்களுக்கு இந்நிறுவனம் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது.

 

 ஐபேட்

 

எல்சிபி தொழில்நுட்பம் மூலம் ஆப்பிள் நிறுவனம் உதிரிபாங்களிடையே அதிவேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியும். மினி எல்இடி ஐபேட் மாடலின் உற்பத்தி பணிகள் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

 

மினி எல்இடி டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஏழு சாதனங்களை ஆப்பிள் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, 14.1 இன்ச் மேக்புக் ப்ரோ, 166 இன்ச் மேக்புக் ப்ரோ, 10.2 இன்ச் ஐபேட் மற்றும் 7.9 இன்ச் ஐபேட் மினி போன்ற சாதனங்கள் அடங்கும். 

 

இத்துடன் 3 ஆம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடலையும் ஆப்பிள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலை விட சிறிய ஸ்டெம் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாலில் உள்ளதை போன்ற இயர்டிப் டிசைன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.