அந்த காரணத்தால் குறைந்த விலை ஐபோன் வெளியீடு தாமதமாகலாம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2021 வெளியீடு அந்த காரணத்தால் தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் எஸ்இ மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்தது. எனினும், 2021 ஐபோன் எஸ்இ வெளியீடு திட்டத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் புதிய ஐபோன் எஸ்இ மாடல் வெளியாகாது என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்சமயம் ஐபோன் 13 கேமராக்களை விநியோகம் செய்ய நான்கு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. 

 

இதன் காரணமாக ஐபோன் எஸ்இ 2021 மாடலுக்கான உற்பத்திபணிகளில் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது. ஐபோன் எஸ்இ 2020 மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஐபோன் 11 ஹார்டுவேர், ஐபோன் 8 வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 

 

 ஐபோன் எஸ்இ

 

வெளியீட்டின் போது இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 2021 மாடல் வெளியாக சில காலம் ஆகும் என ஆப்பிள் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

 

தற்சமயம் ஐபோன் 13 மாடலுக்கான கேமரா ஹார்டுவேரை வழங்குவதில் தாய்வானின் ஜீனியஸ் எலெக்டிரானிக் ஆப்டிக்கல், லார்கன் பிரெசிஷன், செம்கோ மற்றும் சன்னி ஆப்டிக்கல் போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஐபோன் எஸ்இ 2021 உற்பத்தி பணிகள் தாமதமாகி இருக்கிறது.