இன்ஸ்டா ஹோம் ஸ்கிரீனில் இரு அம்சங்கள் சேர்ப்பு

இன்ஸ்டாகிராம் ஹோம் ஸ்கிரீனில் இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதன் விவரங்களை பார்ப்போம்.

இன்ஸ்டாகிராம் செயலியில் புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்ஸ்டா ஹோம் ஸ்கிரீனில் ரீல்ஸ் மற்றும் ஷாப் அம்சங்களுக்கான டேப்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. 

 

 

ரீல்ஸ் மற்றும் ஷாப் போன்ற அம்சங்களை தொடர்ந்து அதிக பயனர்கள் பயன்படுத்தியதே இந்த அப்டேட்டிற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

 

 இன்ஸ்டாகிராம்

 

இன்ஸ்டாகிராம் தனது ஹோம் ஸ்கிரீனில்  மாற்றம் செய்து சில காலம் ஆகிவிட்டது. புதிய அப்டேட்டில் ரீல்ஸ் மற்றும் ஷாப் டேப்கள் ஹோம் ஸ்கிரீனின் கீழ்புறத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே இந்த பகுதியில் காணப்பட்ட நியூ போஸ்ட் மற்றும் போஸ்ட் லைக் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவைகளுக்கான டேப்கள் நீக்கப்பட்டு உள்ளன.