வடக்கின் பல பாகங்களில் இன்று சனிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். இணுவில், இணுவில் கந்தசுவாமி கோவில், துரை வீதி, மருதனார்மடம் பிரதேசம், மருதனார்மடம் சந்தை, மருதனார்மடம் சந்தியிலிருந்து கொக்குவில் செம்பியன் லேன் வரை, மருதனார்மடம் சந்தியிலிருந்து இணுவில் புகையிரத நிலையம் வரை, பாலாவோடை, கோண்டாவில் உப்புமடம் சந்தி, உப்புமடம் சந்தியிலிருந்து கோண்டாவில் புகையிரத நிலையம் வரை, முத்தட்டுமடம் வீதி, தாவடி, தாவடி விஜிதா மில் பிரதேசம், பத்தனை, சுதுமலை, மாப்பியன், ஆஸ்பத்திரி வீதியில் கஸ்தூரியார் வீதிச் சந்தியிலிருந்து காரைநகர் வீதிச் சந்தி வரை, கே. கே. எஸ். வீதி சத்திரத்துச் சந்தியிலிருந்து துரையப்பா விளையாட்டரங்கு வரை, யாழ்ப்பாணம் 1 ஆம், 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், பலாலி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து முலவைச் சந்தி வரை, புகையிரத நிலைய வீதி, மார்ட்டின் வீதி, வடமாகாண ஊழியர் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, சிவன்- பண்ணை வீதி, ஸ்ரீலங்கா ரெலிக்கொம், யாழ். பொதுநூலகம், யாழ்.பொலிஸ் நிலையம், யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி, 1 ஆம் குறுக்குத் தெரு STS வைத்தியசாலை, யாழ்.கலாசார நிலையம், கிறீன் கிறாஸ் விடுதி, யாழ். புகையிரத நிலையம், DAN தொலைக்காட்சி நிலையம், North GATE ஹோட்டல் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.