கேலக்ஸி எஸ்21 வெளியீட்டில் புதிய பிளான் போடும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் வெளியீட்டில் புதிய திட்டத்தை தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் 2021 கேலக்ஸி எஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

 

 

வெளியீட்டை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் ஹூவாய் மற்றும் ஆப்பிள் நிறுவன போட்டியை சிறப்பாக எதிர்கொண்டு பங்குகளை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

 

 கேலக்ஸி எஸ்20 பிளஸ்

 

அமெரிக்காவில் ஜோ பிடன் அதிபரானதும் சீன நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் நிலையில் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என தென் கொரிய சிப் உற்பத்தி துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். 

 

இந்த காரணங்களை முன்வைத்து சாம்சங் தனது புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்கள் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்பட்டு வந்தன.

 

எனினும், புதிய பிளாக்ஷிப் எஸ்21 சீரிஸ் வெளியீடு பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போதைய சூழலில் சாம்சங் சீன நிறுவனங்களான சியோமி, ஒப்போ உள்ளிட்டவைகளின் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.