சியோமியின் ரெட்மி பிராண்டு தனது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், ஆர்க்டிக் வைட் மற்றும் பெபிள் கிரே என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் அமேசான் பிரைம் டே விற்பனைக்கு முந்தைய தினத்தில் ஸ்கார்லெட் ரெட் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் ரெட்மி நோட் 9 ஐந்தாவதாக புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் ஷேடோ பிளாக் வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இது ரூ. 10,999 விலையில் எம்ஐ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 12,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.