சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் எப்இ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 பேன் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலை வழக்கமான எஸ் சீரிசை விட குறைந்த விலையில் சாம்சங் அறிமுகம் செய்தது.
புதிய பேன் எடிஷன் மூலம் சாம்சங் ஒன்பிளஸ் 8டி மற்றும் சியோமி எம்ஐ 10டி ப்ரோ போன்ற மாடல்களை எதிர்கொள்ள சாம்சங் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில், புதிய நோட் 20 எப்இ மாடல் விவரங்கள் சாம்சங் பிரேசல் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 பேன் எடிஷன் மாடல் அந்நிறுவனத்தின் பிரேசில் நாட்டு வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. புதிய கேலக்ஸி நோட் 20 எப்இ மாடல் வெளியீடு பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய நோட் 20 பேன் எடிஷனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எஸ் பென், பிளாஸ்டிக் பேனல், சற்றே பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது. கேமரா அம்சங்களில் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.