ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் நடத்தப்படும் நிகழ்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 25ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொது மக்கள் ஒன்று கூடும் செயற்பாடுகள் அல்லது கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அவ்வாறான இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டிய பக்தர்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 25ஆக காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.