இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

லெனோவோவின் மோட்டோரோலா கெய்வ் எனும் குறியீட்டு பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி சீரிஸ் மாடலாக இருக்கலாம் என்றும் இதில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 

இத்துடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், OLED டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

 

மோட்டோ ஜி9

 

மேலும் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி இரண்டாவது சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. வெளியீட்டின் போது மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதிய மோட்டோ ஜி 5ஜி மாடல் XT2 113-2 மற்றும் XT2 113-3 எனும் மாடல் நம்பர்களுடன் இரண்டு வேரியண்ட்களில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.