மூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று ஸ்கிரீனுடன் உருவாகி வருதாக தகவல்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

 

 

இதில் கேலக்ஸி இசட் போல்டு 3 என கூறப்படும் மாடலின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவை 2018 ஆண்டு வாக்கில் சாம்சங் விண்ணப்பித்து இருந்து காப்புரிமைகளில் இருந்து வெளியாகி உள்ளது. 

 

 கேலக்ஸி இசட் போல்டு 3

 

புதிய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி போல்டு 2 போன்ற தோற்றம் கொண்டிருக்கும். கூடுதலாக ஸ்லைடிங் கீபோர்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் விண்ணப்பத்தில் மொத்தம் எட்டு வரைபடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

 

வரைபடங்களில் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் ஒருபுறம் ஸ்லைடிங் கீபோர்டு காணப்படுகிறது. மொத்தத்தில் இது கேலக்ஸி இசட் போல்டு 2 தோற்றத்தில் கூடுதலாக ஒரு ஸ்கிரீன் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.