தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வெறிச்சோடிக் காணப்படும் ஹட்டன் நகரம்
ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வர்த்தக நிலையங்களும் நேற்றும்,இன்றும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஹட்டன் நகரப்பகுதி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.ஒரு சிலர் வெளியில் நடமாடுவதை காணமுடிந்தாலும் அவர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழங்கி வருவதாகவும்,அரச நிறுவனங்களுக்கும் குறைந்தளவான ஊழியர்களே பணிக்காக சென்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.