ஊரடங்கு வேளையில் வெளிச்செல்வோருக்கு விசேட தகவல்!
ஊரடங்கு வேளையில் பயணிக்கும் அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள், விமான நிலையம், வெளிவிவகார அமைச்சு, தீயணைப்பு திணைக்களம் மற்றும் வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் பணிபுரிவோரே இவ்வாறு தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு வேளை அனுமதிக்குப் பயன்படுத்த முடியும்.
துறைசார் பணியாளர்கள் பணியிடத்துக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.