33 வயதுடைய பெண்ணை கொலை செய்த 22 வயது இளைஞர்...!

33 வயதுடைய பெண்ணை கொலை செய்த 22 வயது இளைஞர்...!

ஹொரவபொத்தானை நகரில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் பெண் ஒருவரை கொலை செய்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

33 வயதுடைய குறித்த பெண் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 22 வயதுடைய குறித்த இளைஞருக்கும் கொலை செய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணிற்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிய பிரச்சினையே இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.