இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி எப் சீரிஸ் புது மாடல் விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மாடல் எப்12 பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் SM-F127G எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்துடன் மற்றொரு கேலக்ஸி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது.

 


 கேலக்ஸி எம்01

 

முந்தைய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் போன்றே புதிய கேலக்ஸி எப்12 மாடலும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

 

இத்துடன் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் SM-A025G எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

 

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.