இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.

இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆப்லைனில் நடைபெறுகிறது. 

 

 

இந்தியா மட்டுமின்றி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்கள் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. 

 

 ஐபோன் 12

 

இரு ஐபோன்களும் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. 

 

இதில் ஐபோன் 12 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ரூ. 34 ஆயிரம் வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.