ஏற்ற இறக்கத்துடன் பதிவாகும் தங்கத்தின் விலை: இன்று பதிவாகியுள்ள நிலவரம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையிலேயே உள்ளதுடன் இன்றைய தினம் சிறியதொரு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 362600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 392000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.