ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா?

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி விவரங்கள் சீனாவின் TENAA சான்றளிக்கும் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த மாடல் A2412 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கிறது.

 

 

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஆப்பிள் 3687 எம்ஏஹெச் பேட்டரி வழங்கி உள்ளது. இது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிகம் ஆகும். எனினும், இது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்ட 3969 எம்ஏஹெச் பேட்டரியை விட குறைவு தான்.

 

 ஐபோன் 12

 

ஐபோன் 12 மாடலில் 2815 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்ட 3110 எம்ஏஹெச் பேட்டரியை விட குறைவே. ஐபோன் 12 ப்ரோ மாடலின் பேட்டரி விவரம் இதுவரை அறியப்படவில்லை.

 

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி துவங்குகிறது. ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு நவம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது. 

 

இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 69,900, ஐபோன் 12 விலை ரூ. 79,900, ஐபோன் 12 ப்ரோ ரூ. 1,19,900 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 1,29,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.