சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை 2021 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சாம்சங் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்வதை அந்நிறுவனம் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தனது பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய எஸ்21 சீரிஸ் உற்பத்தி பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கலாம் என தெரிகிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனம் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளதால், சாம்சங் தனது ஸ்மார்ட்போன் வெளியீடு திட்டத்தை மாற்றியமைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜனவரியில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் பட்சத்தில் சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட போதுமான நேரத்தை பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்கள் ஒ1, பி3 மற்றும் டி2 எனும் குறியீட்டு பெயர்களில் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இவை முறையே கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா எனும் பெயர்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. இவற்றில் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலுடன் எஸ் பென் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எஸ்21 சீரிஸ் - கிரே, பின்க், சில்வர், வயலெட் மற்றும் வைட் என ஐந்து வித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இவற்றுடன் வரும் கேலக்ஸி பட்ஸ் 2 பிளாக், சில்வர் மற்றும் வயலெட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.