ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல்கள் நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

 

 

இது உண்மையாகும் பட்சத்தில் அடுத்தடுத்த மாதங்களில் புதிய சாதனங்களை ஆப்பிள் முதல் முறையாக அறிமுகம் செய்ததாக இருக்கும். மேலும் அனைத்து நிகழ்வுகளும் விர்ச்சுவல் முறையில் நடைபெறுகின்றன.

 

 ஆப்பிள் சிலிகான்

 

முன்னதாக பிரபல ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் ஆப்பிள் அடுத்தடுத்து புதிய சாதனங்களை தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

அந்த வகையில் புதிய மேக் மாடலுடன் உயர் ரக ஒவர் இயர் ஹெட்போன் மாடலான ஏர்பாட்ஸ் ஸ்டூடியோவும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் ஐபோன் வெளியீட்டு நிகழ்விலேயே புதிய ஏர்டேக்ஸ் மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.