ஆப்பிள் நிறுவனம் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் பல்வேறு இதர அக்சஸரீக்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை சார்ஜ் செய்யும் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் மேக்சேப் டுயோ போல்டபில் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்டவைகளின் பின்புறம் வயர்லெஸ் சார்ஜர்களை சப்போர்ட் செய்யும் காந்தங்களை கொண்டிருக்கிறது. விரைவில் பெல்கின் போன்ற மூன்றாம் தரப்பு பிராண்டுகளும் தங்களின் மேக்சேப் அக்சஸரீக்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.
மேக்சேப் சார்ஜர்கள் கியூஐ தர வசதி கொண்டு அதிகபட்சம் 15 வாட் திறன் வழங்குகின்றன. இவை மற்ற கியூஐ சாதனங்களுடன் இயங்கும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. புதிய மேக்சேப் சார்ஜர் விலை 39 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.