சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் ஸ்டோரில் புதிய மாற்றத்தை கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான சோனி பிளேஸ்டேஷன் 5 கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. பிளேஸ்டேஷன் 5 மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. பிளேஸ்டேஷன் ஸ்டோர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான தகவல்களில் புதிய பிளேஸ்டேஷன் ஸ்டோர் பிளேஸ்டேஷன் 3 மற்றும் பிளேஸ்டேஷன் விட்டாவுக்கு ஆதரவு வழங்காது. ஆனால் பிளேஸ்டேஷன் 3 மற்றும் பிளேஸ்டேஷன் விட்டா பயனாளிகள் விரும்பினால் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒஎஸ்-இல் கேம்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
பிளேஸ்டேஷன் 4-ல் உள்ள ஆப்ஸ், தீம்ஸ் உள்ளிட்டவைகள் புதிய பிளேஸ்டேஷன் ஸ்டோரில் இருக்காது. மேலும் விஷ்லிஸ்ட்டும் நீக்கப்பட்டு விடும். உங்களுக்கு வேண்டுமானால் விஷ்லிஸ்ட் செய்த கேம்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் எப்பொழுது செயற்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் நவம்பர் 12 ஆம் தேதி பிளேஸ்டேஷன் 5 (PS5) வெளியிடப்படும் என சோனி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த வாரம் சோனி நிறுவனம் காணொளி ஒன்றை வெளியிட உள்ளது.அதில் PS5-ன் வடிவம் மற்றும் கன்சோல் பற்றிய முழு தகவல்களையும் வெளியிடும் என்று கூறியுள்ளது.