சீன தளத்தில் வெளியான ஐபோன் 12 விலை விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் விலை விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில், புதிய ஐபோன் 12 சீரிஸ் விலை மற்றும் இதர விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

 

இந்த ஆண்டு அறிமுகமாகும் அனைத்து ஐபோன்களும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் அமெரிக்க மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடல்களுடன் இயர்போன் மற்றும் சார்ஜர்கள் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

5.4 இன்ச் ஐபோன் 12 மினி மாடல் விலை 699 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 51,110 என நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி வெர்ஷன்களில் கிடைக்கும் என்றும் பிளாக், வைட், ரெட், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

 

6.1 இன்ச் ஐபோன் 12 விலை 799 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 58,410 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடலும் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி வெர்ஷன்களில் கிடைக்கும் என்றும் பிளாக், வைட், ரெட், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

 

6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 12 ப்ரோ விலை 999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 73,050 என கூறப்படுகிறது. இந்த மாடல் 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி வெர்ஷன்களில் கிடைக்கும் என்றும் கோல்டு, சில்வர், கிராபைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

 

6.7 இன்ச் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 80,370 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த மாடல் 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி வெர்ஷன்களில் கிடைக்கும் என்றும் கோல்டு, சில்வர், கிராபைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.