டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை விதிப்பு

ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு. அந்த வகையில், டிக் டாக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான விடீயோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது.  

 

சமூகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்த தொடர் புகார்களை அடுத்து டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

சீனாவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தான், அந்நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான செயலியை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.