ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கி வருகிறது.
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 வழங்கப்பட்டு வருகிறது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனினை 2018 மே மாத வாக்கில் அறிமுகம் செய்த நிலையில் புது அப்டேட் 2020 இரண்டாவது காலாண்டில் வெளியாகும் என அறிவித்து இருந்தது.
எனினும், அப்டேட் வெளியாக காலதாமதம் ஆகி தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் இந்தியா மட்டுமின்றி மேலும் சில நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் இந்தியா, அர்மெனியா, வங்கதேசம், பெலாரஸ், ஜார்ஜியா, கசகஸ்தான், லவோஸ், மலேசியா, மங்கோலியா, மொரோக்கோ, நேபால், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, துனிசியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படுகிறது.
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6750 சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் பாலிகார்போனேட் மற்றும் பக்கவாட்டுகளில் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நோக்கியா 3.1 டூயல் டைமண்ட் கட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.