இந்திய சந்தையில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முந்தைய மாடல்களை போன்றே புதிய டிவிக்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப் போன்ற ஸ்டிரீமிங் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இவற்றில் அதிகபட்சம் 48 வாட் சவுண்ட்பார் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் யுஎஸ்பி, ஹெச்டிஎம்ஐ போர்ட்கள், 4கே, புல் ஹெச்டி, ஹெச்டி ரெடி ஆப்ஷன்கள் மற்றும் அதிகபட்சம் 65 இன்ச் அளவில் கிடைக்கிறது. மேலும் ஹெச்டிஆர் 10, மைக்ரோ டிம்மிங் மற்றும் புரோண்டோ போக்கல் ஏஐ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
நோக்கியா ஸ்மார்ட் டிவி 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடலின் விலை ரூ. 12,999 என்றும், 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் ரூ. 22,999 என்றும் 43 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி மாடல் விலை ரூ. 28,999, 50 இன்ச் 4கே மாடல் ரூ. 33,999, 55 இன்ச் 4கே மாடல் ரூ. 39,999 என்றும் 65 இன்ச் 4கே மாடல் ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.