காவல் துறையினரின் மற்றுமொரு கோரிக்கை...!
மினுவாங்கொடையிலுள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஏற்கனவே கம்பஹா பகுதியிலுள்ளவர்களுக்கு 14 இடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வத்தளை அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் ஏனையவர்களுக்கு காவல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கமைய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள காவல் துறை பிரிவிற்குட்பட்ட அல்லது தங்களது விடுதிகளில் தங்கியிருக்கும் பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றியவர்களுக்கு மாலை 6 மணிக்கு முன்னதாக அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.