ஐதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் 17-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா- குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷார்ஜா சிறிய மைதானம் என்பதால் ரோகித் சர்மாவின் அதிரடியைக் காண ரசிகர்கள் காத்திருந்தனர்.

 

முதல் ஓவரை சந்தீப் சர்மா வீசினார். 4-பந்தில் ரோகித் சர்மா சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இதுவரை சரியாக விளையாடாமல் இருந்து குயின்டான் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சூர்யகுமார் யாதவும் அதிரடி காட்டினார்.

 

6-வது ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 32 பந்தில் அரைசதம் அடித்த டி காக் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி காக் ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 13.1 ஓவரில் 126 ரன்கள் அடித்திருந்தது.

அதன்பின் வந்த பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ருத்ர தாண்டவம் ஆடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொல்லார்ட் 13 பந்தி் 25 ரன்கள் அடித்தார். குருணால் பாண்ட்யா கடைசி 4 பந்தில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் விளாசியுள்ளது,