வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி

மேல், வடமேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடை மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
சபவரகமுவ மாகாணத்திலும்  நுவரெலிய, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அத்தோடு மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டதிலும் காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.