யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை தொடர்பில் விசாரணை (படங்கள்)

யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை தொடர்பில் விசாரணை (படங்கள்)

 

யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நகர முதல்வர், நகர ஆணையாளர் உள்ளிட்ட சில தரப்பினரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு, யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பேணுவதற்காக, மாநாகர சபையினால் ஐவர் கொண்ட காவல்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல், அசுத்தப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, கழிவுகளை கொட்டினால் 5,000 ரூபாவும், வெற்றிலை எச்சில் உமிழ்ந்தால் 2,000 ரூபாவும் அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.