ரஷ்யாவில் மேலும் 8,536 பேருக்கு கொரோனா வைரஸ்,178 இறப்புக்கள் பதிவு

ரஷ்யாவில் மேலும் 8,536 பேருக்கு கொரோனா வைரஸ்,178 இறப்புக்கள் பதிவு

ரஷ்யாவில் இன்று (புதன்கிழமை) 8,536 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 4 இலட்சத்து 32 ஆயிரத்து 277 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 178 இறப்புகளும் பதிவாகியுள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,215 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலகளவில் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மொஸ்கோவில் மக்கள் மீண்டும் வெளியில் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் முககவசங்களை அணிந்துகொள்வது மற்றும் சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.