எம்.ரி.நியூ டயமண்ட் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆமைகளின் செயற்பாட்டில் மாற்றம்..!
நாட்டின் கடற்பரப்பிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி எம்.ரி.நியூ டயமண்ட் கப்பலுக்கு வழங்கப்படவில்லை என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லகதபுர இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கப்பலை விடுவித்தன் பின்னர் அதனை கொண்டு செல்லும் வழிமுறையை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அனுமதியை கடல் பாதுகாப்பு இணைப்பு மத்திய நிலையம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீப்பற்றலுக்குள்ளான எம்.ரி. நியூ டயமண்ட் கப்பல் மூலம் ஏற்பட்ட கடல்சூழல் பாதிப்பு தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக சட்டமா அதிபர் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகார அரச சட்டவாதியான நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கடல்சூழல் பாதிப்பு தொடர்பான செயற்பாடுகள் நிறைவடையும் வரை கப்பலை கொண்டு செல்ல அனுமதியளிக்ககூடாது என கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபரிடம் கோரியுள்ளது.
எனினும், குறித்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆமைகளின் நடத்தையில் மாற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.