பத்மஸ்ரீ விருது வழங்கும் விழா: ரோகித் சர்மா வராதது ஏன்?

பத்மஸ்ரீ விருது வழங்கும் விழா: ரோகித் சர்மா வராதது ஏன்?

பத்மஸ்ரீ விருது அறிவித்ததற்கு இந்திய அரசு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ரோகித் சர்மா வீடியோ வெளியிட்டார்.

தலைநகர் புதுடெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டோர் நேரில் வந்து தங்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்திய கிரிக்கெட்டிற்கான அவரது பங்களிப்பு, தலைமைத்துவ சாதனைகள் மற்றும் சர்வதேச அளவிலான வெற்றிகளைப் பாராட்டி, இந்திய அரசு ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது. 

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்கு இந்திய அரசுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ரோகித் சர்மா வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பத்ம விருதுகள் விழாவில் ரோகித் சர்மா பங்கேற்காதது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நிர்வாக மற்றும் அட்டவணை காரணங்களால் ரோகித் சர்மா முதல் கட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.

முதல் கட்ட விழாவில் பங்கேற்க முடியாதவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக நடக்கும் நிகழ்ச்சிகளில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். எனவே, ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் மற்றொரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரோகித் சர்மா அதிகாரப்பூர்வமாக பத்மஸ்ரீ விருதைப் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.