யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களை நையப்புடைத்த கிராம மக்கள்!
யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த நால்வரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.