எவ்வித இடையூறும் இன்றி கடமைகளை முன்னெடுப்பார் டொனால்ட் ட்ரம்ப்..!

எவ்வித இடையூறும் இன்றி கடமைகளை முன்னெடுப்பார் டொனால்ட் ட்ரம்ப்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியாருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி இதனை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகருக்கு கொவிட்-19 தொற்றுறதியானமையை அடுத்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்பிற்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்பின் குடும்ப மருத்தவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்தவித இடையூறும் இல்லாமல் டொனால்ட் ட்ரம்ப் தனது கடமைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்