கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்

கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்

கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்காக வழங்கப்பட்டுள்ள 'கூகுள் படிவத்தை' (Google Form) பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல் | Key Update For Sri Lankans Residing In Qatarஅவசர காலங்களில் தொடர்புகளைப் பேணுவதற்கும்,ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், மக்கள் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்குமே இந்தத் தரவு சேகரிப்பு நடத்தப்படுகிறது.

கோரப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் மிகத் துல்லியமாக உள்ளீடு செய்து, அந்தப் படிவத்தை மிக விரைவில் சமர்ப்பிக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இவ்வாறான பதிவுகள் மிகவும் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.