ஓடும் ரயிலில் ஏற முயன்ற தொழில்நுட்ப நிபுணருக்கு காத்திருந்த துயரம்
வாதுவ ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வாதுவ, பாலிகா வீதியில் வசிக்கும் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் இன்று காலை வாதுவ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் பயணத்தைத் தொடங்கவிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.