ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை ; அரசாங்க தரப்பில் வெளியான தகவல்

ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை ; அரசாங்க தரப்பில் வெளியான தகவல்

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை ; அரசாங்க தரப்பில் வெளியான தகவல் | Gov Says Iranian Ship Not In Sri Lankan Watersஇது குறித்துப் பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் தெரியும் எனவும், பிரச்சினையைத் தீர்க்கவும், உயிர்ச்சேதங்களைக் குறைக்கவும், பிராந்திய அமைதியைப் பாதுகாக்கவும் தேவையான தலையீடுகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் விரிவான அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.