சரியான புள்ளி விபரத்தை அரசாங்கம் வழங்குமா? ஹர்ச டி சில்வா சவால்
இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்ய நாடு கட்டாயப்படுத்தப்படும் என்று முதலீட்டாளர் நிமல் பெரேரா கூறியது தவறு என்பதை நிரூபிக்க வேண்டுமானால், இலங்கையின் பொருளாதாரம் குறித்த சரியான தோற்றத்தை அரசாங்கம் சரியான புள்ளி விவரங்களுடன் வழங்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.
அவ்வாறு செய்யும்போதே மூடிஸ் மதிப்பீடுகளின்படி, இலங்கை அதிக கடன் அபாயமுள்ள நாடு என்று பெயரிடுவதில் தவறானது என்பதையும் உறுதிப்படுத்தமுடியும் என்றும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி முதலீட்டாளரான நிமல் பெரேரா தனது ட்விட்டர் செய்தியில், அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அல்லது மொத்த இறக்குமதி தடைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூடிஸ் மதிப்பீடுகள் இலங்கையை தரமிறக்கியுள்ளன. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், கடன்களை அடைப்பதற்கும் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதற்கும் சர்வதேச சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்திற்கு செல்ல வேண்டும் அல்லது இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று பெரேரா கூறியுள்ளார்.
எனவே இந்த விடயத்தை மறுக்கவேண்டுமானால் அரசாங்கம் உண்மையான பொருளாதார புள்ளிவிபரங்களை வெளியிடவேண்டும் என்று ஹர்ச டி சிலவா கோரியுள்ளார்.