டீசல் மின்னுற்பத்தியை 5 சதவீதமாக குறைக்க திட்டம்
டீசலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியை நூற்றுக்கு 5 சதவீதத்தால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போது, நாட்டின் மின்சார உற்பத்தியில் 30 சதவீதமானவை டீசலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னாரில் நிர்மானிக்கப்படும் இந்நாட்டின் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026