ரயில் பாதையின் அருகில் இருப்போருக்கு அதிலிருந்து விடுதலை - தயாராகும் புது வீடுகள்
ரயில் பாதைகளின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் பாதையின் இரு மருங்கிலுமுள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மருதானை தொடக்கம் பாதுக்க வரை வசிக்கும் ஆயிரத்து 630 குடும்பங்களை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நெரிசல்மிகு ரயில் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பாலித சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, களனி ஆற்றின் இருபுறமும் சுமார் 4,000 தொழிற் சாலைகள் அனுமதி பெறாமல் இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட அமைச்சின் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின்போது இந்த உண்மைகள் வெளிவந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.