இறக்குமதி தடையால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கும் யாழ் வணிகர்கள்

இறக்குமதி தடையால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கும் யாழ் வணிகர்கள்

நாட்டில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களிற்கு இறக்குமதி தடை விதித்துள்ளமையினால் வர்த்தகர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவதாக யாழ். வணிகர் கழக செயலாளர் க.சிவலோகேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

இப் பாதிப்பின் காரணமாக ஊழியர் சம்பளம், கடை வாடகை, மின்சாரக் கட்டணம், ஆகியவற்றினை செலுத்த பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.

இந்த வர்த்தகத்துறையை மேம்படுத்த அரசு பல சலுகையை வழங்கினாலும் வர்த்தகத்துறையை மீளக் கட்டியெழுப்ப மிகவும் சிரமமாகவுள்ளது என்றார்.