கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

தனியார் துறையில் பணி புரிபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 15 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் முழுமையான அறிக்கை தொழில் மற்றும் உறவுகள் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்திமை, மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படாமை, மாதாந்த கொடுப்பனவில் ஒரு பகுதி மட்டும் வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து நேரடியாக கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான தீர்வுகளும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.