இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்

உலகில் கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையால் நகைப்பிரியர்கள் கவலையில் உள்ளனர்.

அமெரிக்க வரி மற்றும் ஆயுத மோதல்களால் உலகில் வரலாறு காணாத அளவு தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் | Today S Gold Price In Sri Lanka

இந்நிலையில் , நாட்டில் நேற்று முதல் இதுவரை மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 327,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.