கடலில் நீராட சென்ற வைத்தியருக்கு நேர்ந்த கதி
மிரிஸ்ஸ கடலில் நீராட சென்ற வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று(25) பிற்பகல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், வெலிகமவில் உள்ள வாலன மாவட்ட வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் என்று கூறப்படுகிறது.
நீரில் மூழ்கிய பின்னர் அப்பகுதிவாசிகளால் அவர் மீட்கப்பட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட 49 வயதான வைத்தியர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த வைத்தியசாலையில் பணிபுரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதன்படி மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.