தாய் தந்தையுடன் சென்ற சிறுமிக்கு எமனான வாகனம்
வெலிபென்ன , அளுத்கம-மத்துகம வீதியில் 5ஆவது தூண் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்துடன் மோதியுள்ளார்.

காயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அவரது தந்தை மற்றும் தாயார் மேலதிக சிகிச்சைக்காக நாகொட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்துக்குப் பிறகு வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.