
அரிசி, தேங்காய் ஆகியவற்றை அதிக விலையில் விற்பனை செய்யும் நபர்களுக்கு எச்சரிக்கை!
புத்தளம் மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை விற்பனை செய்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, 300 க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பிரதேச பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், பல்வேறு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.