சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை திடீர் அதிகரிப்பு
சர்வதேசச் சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (11) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.74 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.92 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.029 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணிக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், எரிசக்தி சந்தையில் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது உலக நாடுகளின் எரிபொருள் இறக்குமதிச் செலவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.