கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி ; இளைஞனுடன் கைதான 06 பெண்கள்

கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி ; இளைஞனுடன் கைதான 06 பெண்கள்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று  (09) மாலை சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி ; இளைஞனுடன் கைதான 06 பெண்கள் | Brothel Raided In Colomboவிபச்சார விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் ஒரு ஆணும், விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 23 வயதுடைய ஆண் சந்தேகநபர் ஊரகஸ்மங்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடுவலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதலங்கல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.