அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
தற்போது இயல்பு நிலை திரும்பபட்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டமானது நீக்கப்படுகிறது.
இந்தநிலையில், அரசாங்க ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. இது தொடர்பில் இன்று அல்லது நாளை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 10ஆம் திகதி முதல் டிக்கட் ஒதுக்கிக் கொண்டவர்கள் மாத்திரமின்றி அனைவரும் பயணிப்பதற்கு அனுமதி வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனால் போக்குவரத்து தொடர்பில் சிக்கல் ஏற்படாதென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா ரைவஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அரச மற்றும் தனியார் துறை முற்றாக முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.