தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறாது என அறிவிப்பு

தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறாது என அறிவிப்பு

தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளுடன் கேரளா, அசாமில் வெற்றிடமாகவுள்ள தலா 2 தொகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தில் வெற்றிடமாகவுள்ள ஒரு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுள் எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.

இந்த நிலையில், இந்த தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்துவதில் சிரமம் உள்ளதாக சம்பந்தப்பட்ட அரசு தலைமைச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெற்றிடமாகவுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி சாமி, காத்தவராயன் ஆகியோர் காலமானதால் திருவொற்றியூர் தொகுதியும் குடியாத்தம் தொகுதியும் வெற்றிடமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.